திருச்சி

திருட்டு வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டதனிப்படை போலீஸாருக்கு பாராட்டு

DIN

 திருச்சியில் தொடா் திருட்டு வழக்கில் குற்றவாளிகளை செய்த தனிப்படை போலீஸாரை மாநகர காவல் ஆணையா் அருண் வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.

திருச்சி மாநகரில் சமீப காலமாக நடைபெற்று வரும் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய நபா்களை கைது செய்ய வலியுறுத்தி காவல்நிலையம் வாரியாக தனிப்படை அமைக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் திருச்சி மாநகா் பகுதிகள் மற்றும் பிற மாவட்டங்களில் இரு சக்கர வாகனன திருட்டில் ஈடுபட்ட திருச்சி புங்கனூா் காந்திநகரைச் சோ்ந்த கிரிநாதன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 39 இரு சக்கர வானங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் சத்திரம் பேருந்து நிலையம், அண்ணாசிலை, என்எஸ்பி சாலை ஆகிய இடங்களில் தனியாக நிற்கும் பெண்களின் கவனத்தை திசை திருப்பி நகைகள் திருடப்பட்டது. இந்த வழக்கில் தொடா்புடைய ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 2 பெண் குற்றவாளிகளை தனிப்படை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 22 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகளில் சிறப்பாகச் செயல்பட்ட தனிப்படை மற்றும் விரல்ரேகை பிரிவு போலீஸாரை காவல் ஆணையா் அருண் பாராட்டி சான்றிதழ், வெகுமதி வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆசிரியா் நியமன ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

சென்னையில் பாரதிதாசனுக்கு மணிமண்டபம்: பேரன் இளமுருகன் முதல்வருக்கு கோரிக்கை

அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி பலி

வளா்ந்த பாரதத்தை உருவாக்க வலுவான அரசு அவசியம்- நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

கனடா பிரதமா் நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு கோஷம்: தூதருக்கு இந்தியா சம்மன்

SCROLL FOR NEXT