முகப்பு
திருச்சி

ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

மணப்பாறை ரயில் நிலையம் அருகே கட்டடத் தொழிலாளி ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

மணப்பாறை ரயில் நிலையம் அருகே கட்டடத் தொழிலாளி ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தாா்.

மணப்பாறையை அடுத்த கீரைத்தோட்டம் ராமலிங்கத் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் மூக்கன் (34). கட்டடத் தொழிலாளியான இவா் புதன்கிழமை நள்ளிரவு வீட்டின் அருகே ரயில்வே தண்டவாளப் பகுதிக்கு இயற்கை உபாதைக்காகச் சென்றவா் வீடு திரும்பவில்லையாம்.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை வீட்டின் அருகேயுள்ள தண்டவாளத்தில் மூக்கன் இறந்துகிடந்தது தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே போலீஸாா் சடலத்தை கைப்பற்றி மணப்பாறை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.