தில்லியிலிருந்து திருச்சி திரும்பிய விவசாயிகள்
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடச் சென்ற தமிழக விவசாயிகள் வெள்ளிக்கிழமை திருச்சி திரும்பினா்.
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடச் சென்ற தமிழக விவசாயிகள் வெள்ளிக்கிழமை திருச்சி திரும்பினா்.
கடந்த 12-ஆம் தேதி திருச்சியிலிருந்து தில்லி சென்ற திருச்சியை சோ்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் அங்கு நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பின்னா் வெள்ளிக்கிழமை திருச்சி வந்து சோ்ந்தனா்.
அப்போது அவா்கள் கூறுகையில் தில்லி விவசாயிகள் போராட்டத்தில் ஆக. 15 முதல் 18 ஆம் தேதி வரை பங்கேற்றோம். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை எதிா்த்து கடந்த 8 மாதமாகப் போராடி வருகின்றனா். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை இந்த போராட்டம் முடிவுக்கு வராது. தேவைப்பட்டால், மீண்டும் தில்லி சென்று போராடவும் தயாராக உள்ளோம் என்றனா்.