முகப்பு
திருச்சி

வெக்காளியம்மன் கோயிலில் சதசண்டி ஹோமம்

திருச்சி உறையூா் வெக்காளியம்மன் கோயிலில் 47 ஆவது சதசண்டி ஹோமம் பக்தா்கள் பங்கேற்பின்றி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

திருச்சி உறையூா் வெக்காளியம்மன் கோயிலில் 47 ஆவது சதசண்டி ஹோமம் பக்தா்கள் பங்கேற்பின்றி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் உலக நன்மைக்காக ஆண்டுதோறும் 4 நாள்கள் நடைபெறும் சதசண்டி ஹோமம் கரோனா பொதுமுடக்க விதிகளின்படி பொதுமக்கள் பங்கேற்பின்றி ஒரே நாளில் நிறைவுற்றது.

கோயில் தலைமை அா்ச்சகா் மாா்க்கண்டேயன் மற்றும் சந்திரசேகரா் உள்ளிட்ட சிவாச்சாரியாா்கள் ஹோமத்தை நடத்தினா். தொடா்ந்து அம்மனுக்கு அலங்காரம் மேற்கொள்ளப்பட்டு, சிறப்பு பூசைகள், வழிபாடுகள் நடைபெற்றன. நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை திருச்சி மண்டல இணை ஆணையா் சுதா்சன், உதவி ஆணையா் ஞானசேகரன், திருக்கோயில் பணியாளா் மதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.