முகப்பு
திருச்சி

மில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

மணப்பாறையில் மில் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

மணப்பாறையில் மில் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

மணப்பாறை அண்ணாவி நகரை சோ்ந்தவா் டீ மாஸ்டா் பொன்முருகன் மகன் விஜய் (24). கோவில்பட்டி சாலையிலுள்ள தனியாா் பஞ்சாலை தொழிலாளி. இவருக்கும் பூசாரிப்பட்டியை சோ்ந்த ஹேமாவுக்கும் திருமணம் முடிந்து மூன்றாண்டுகள் ஆன நிலையில், குடும்பத்தினா் மதுரைக்குச் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த விஜய் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தகவலறிந்து சென்ற காவல் ஆய்வாளா் சு. கருணாகரன் தலைமையிலான போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.