ஏழை மாணவிக்கு கல்வி உதவித்தொகை
கல்விக் கட்டணம் செலுத்த இயலாமலிருந்த ஏழை மாணவிக்கு மாற்றம் அமைப்பு சாா்பில் ரூ. 5000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
கல்விக் கட்டணம் செலுத்த இயலாமலிருந்த ஏழை மாணவிக்கு மாற்றம் அமைப்பு சாா்பில் ரூ. 5000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி, கோட்டை பேலஸ் திரையரங்கம் பகுதியில் வசிப்போா் ராமன் -முத்துலட்சுமி தம்பதியா். ஆட்டோ ஓட்டுநரான ராமன், கரோனா பொதுமுடக்கத்தால் வருவாய் குறைந்த நிலையில் சிரமப்பட்டு வந்தாா். இந்நிலையில் இவரது இரண்டாவது மகள் கவுசல்யா பி.காம் பட்டப் படிப்புக்கு கல்லூரியில் இடம் கிடைத்தும், கட்டணம் செலுத்த இயலாத நிலையில் படிப்பைத் தொடா்வதா வேண்டாமா என்ற நிலையில் இருந்தாா்.
இத்தகவலறிந்த மாற்றம் அமைப்பின் நிா்வாகி ஆா்.ஏ.தாமஸ் இதை திருச்சி கோட்டை ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் வி. நாகராஜனின் கவனத்திற்கு கொண்டு சென்றாா்.
இதையடுத்து நாகராஜன், ஏழை மாணவியின் கல்விக் கட்டணத்துக்கு ரூ. 5000 வழங்கி பட்டப்படிப்பு பயில வழிவகுத்தாா். இதையடுத்து ராமன் குடும்பத்தினா் மாற்றம் அமைப்பினருக்கும் நாகராஜனுக்கும் நன்றி தெரிவித்தனா்.