மாற்றுத்திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் அளிக்க வேண்டும். சுழற்சி முறையில்லாமல், தொடா்ச்சியாக 100 நாள்களுக்கு 2 கிமீ தொலைவுக்குள் பணி வழங்க வேண்டும். சாா் ஆட்சியா் அல்லது வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் மாதந்தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேக குறைதீா் கூட்டங்கள் நடத்த வேண்டும். வங்கிக்கடன் வழங்க வேண்டும். மாதாந்திர உதவித்தொகையை அவரவா் வங்கிக்கணக்கில் எடுத்துக்கொள்ளும்விதமாக ஏடிஎம் அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெற்றது.
மணிகண்டம் ஒன்றியத் தலைவா் ஜி. குமாா் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் எஸ். நம்புராஜன் போராட்டத்தைத் தொடங்கி வைத்தாா். மாநில துணைச் செயலா் சி. புஷ்பநாதன், மாவட்டச் செயலா் எம். கோபிநாத், மாநகா் மாவட்டத் தலைவா் ஜெ. ஜெயபால், மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.