முகப்பு
திருச்சி

இளைஞருக்கு கத்திக் குத்து:மாமனாரிடம் விசாரணை

 தொட்டியத்தில் இளைஞரைக் கத்தியால் குத்திய மாமனாரிடம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:48 AM
பகிர்:

 தொட்டியத்தில் இளைஞரைக் கத்தியால் குத்திய மாமனாரிடம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தொட்டியம் அருகேயுள்ள பாலசமுத்திரத்தைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (45) மகள் கவிப்பிரியாவும் (20)தொட்டியம் அழகுநாச்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பிரசாந்த்தும் (21) கடந்த 19-ஆம் தேதி காதல் திருமணம் செய்தனா்.

இதில் கோபமடைந்த அசோக்குமாா் புதன்கிழமை இரவு மருமகன் பிரசாந்த்திடம் தகராறு செய்து, திட்டி கத்தியால் குத்தியுள்ளாா். இதில் காயமடைந்த பிரசாந்த் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தொட்டியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.