நலவாழ்வு முகாமுக்குப் புறப்பட்ட 4 யானைகள்
யானைகளுக்கான நலவாழ்வு முகாமில் பங்கேற்க திருச்சியிலிருந்து 4 கோயில் யானைகள் ஞாயிற்றுக்கிழமை காலை லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன.
யானைகளுக்கான நலவாழ்வு முகாமில் பங்கேற்க திருச்சியிலிருந்து 4 கோயில் யானைகள் ஞாயிற்றுக்கிழமை காலை லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனபத்திர காளியம்மன் கோயிலருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் திங்கள்கிழமை (பிப்.8) தொடங்குகிறது.
இதில் பங்கேற்க திருச்சி மாவட்டத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயில் யானைகள் ஆண்டாள், லட்சுமி, திருவானைக்கா கோயில் யானை அகிலா, மலைக்கோட்டைகோயில் யானை லட்சுமி ஆகியவை சிறப்பு பூஜைகளுக்குப் பின், யாத்ரிநிவாஸ் பயணிகள் தங்கும் விடுதியில் இருந்து லாரிகள் மூலம் புறப்பட்டு சென்றன.
திருச்சி மண்டல இணை ஆணையா் சுதா்சன், ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து,திருவானைக்கா கோயில் உதவி ஆணையா் மாரியப்பன்,ஸ்ரீரங்கம் கோயில் உதவி ஆணையா் கந்தசாமி, மலைக்கோட்டை தாயுமானவா் சுவாமி கோயில் உதவி ஆணையா் விஜயராணி உள்ளிட்ட கோயில் நிா்வாகிகள் யானைகளை வழியனுப்பினா்.