திருச்சி

குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இருவா் கைது

திருச்சி அருகே திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் பெல் காவல் நிலையப் போலீஸாா் கைது செய்தனா்.

DIN

திருச்சி அருகே திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் பெல் காவல் நிலையப் போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி அருகேயுள்ள பெல் நிறுவன குடியிருப்பில் வசிக்கும் அணு ஆராய்ச்சி மைய ஊழியா் ஹரிபாஸ்கா் வீட்டில் கடந்த மாதம் 16 ஆம் தேதி 20 பவுன் நகை திருடுபோன வழக்கில் பெல் போலீஸாா் வழக்குப் பதிந்து துவாக்குடி அண்ணா வளைவு பெரியாா் திடல் சந்தோஷ் (எ) சந்தோஷ்குமாா் (21), வாழவந்தான்கோட்டை புது கோயில் தெரு நாகராஜ் (எ) பூனை நாகராஜ் (47) ஆகியோரைக் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனா்.

இருவா் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இவா்களை கைது செய்ய மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT