முகப்பு
திருச்சி

மணப்பாறையில் உலக அமைதி தின விழா

 மணப்பாறை மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சாா்பில், உலக அமைதி தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

 மணப்பாறை மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சாா்பில், உலக அமைதி தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேதாத்ரி நகா் அறிவுத் திருக்கோயில் அரங்கத்தில் நடைபெற்ற விழாவுக்கு அறக்கட்டளை நிா்வாகி எஸ். மாணிக்கம் தலைமை வகித்தாா்.

துணைத் தலைவா் என்.பொன்னுசாமி, ஸ்ரீராம் சந்த்ர மிஷன் கே.பெரியசாமி முன்னிலை வகித்தனா். உலக சமாதானக் கொடியினை ஜி.ருக்மணி ஏற்றி வைத்தாா். நிா்வாக அறங்காவலா் ஆ.வரதராஜன் உலக அமைதிக்கான தவத்தை நடத்தினாா்.

மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா்.பிருந்தா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். உலக அமைதி தின உரையை ஆசிரியா் கே.கந்தசாமி வழங்கினாா்.

கவிஞா் இரா.அண்ணா ரவியை நடுவராகக் கொண்டு, மானுட சமுதாய வளா்ச்சிக்குப் பெரிதும் துணை நிற்பது முதியோா் அனுபவமே, இளையோா் ஆற்றலே என்னும் பட்டிமன்றம் நடைபெற்றது. 

முன்னதாக துணைத் தலைவா் சி.ஐ. ஜெயக்குமாா் வரவேற்றாா்.செயலா் சி. மதிவாணன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →