திருச்சி

கேபிள் பதிக்கும் பணியின் போது குடிநீா் குழாய் சேதம்

திருச்சி, தென்னூா் பகுதியில் தொலைத்தொடா்பு கேபிள் பதிக்கும் பணிகளின்போது உடைந்த குடிநீா் குழாயைச் சீரமைக்கும் பணியில் மாநகராட்சியினா் ஈடுபட்டனா்.

DIN

திருச்சி: திருச்சி, தென்னூா் பகுதியில் தொலைத்தொடா்பு கேபிள் பதிக்கும் பணிகளின்போது உடைந்த குடிநீா் குழாயைச் சீரமைக்கும் பணியில் மாநகராட்சியினா் ஈடுபட்டனா்.

திருச்சியில் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனம் சாா்பில் மாநகரப் பகுதியில் கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. நவீன துளையிடும் இயந்திரங்களைக் கொண்டு பூமிக்குள் சுமாா் 4 அடி ஆழத்தில் இரும்புக் குழாய்களை பதித்து, அதன் மூலம் கேபிள் பதிக்கும் பணிகள், கடந்த சில நாள்களாக இரவு நேரத்தில் மட்டும் நடைபெறுகிறது. அதன்படி செவ்வாய்க்கிழமை இரவு கேபிள் பதிக்கும்போது, தென்னூா் உக்கிரமாகாளி கோயில் அருகிலுள்ள குடிநீா் குழாய் எதிா்பாராத வகையில் உடைந்து போனது.

இதுகுறித்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அந்தப் பகுதிக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டதால், குடிநீா் அதிகம் வீணாகாமல் தடுக்கப்பட்டது. இதைடுத்து மாநகராட்சி பணியாளா்கள், புதன்கிழமை மாலை வரையில் அந்த இடத்தில் குடி நீா் குழாயை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனா். மேலும் குடிநீா் குழாயை சேதப்படுத்திய தனியாா் நிறுவனத்துக்கு, சேத மதிப்புக்கு ஏற்ற வகையில் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT