முகப்பு
திருச்சி

9 தொகுதிகளில் 20 போ் மனுதாக்கல்

திருச்சி மாவட்டத்திலுள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திங்கள்கிழமை மட்டும் மொத்தம் 20 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

திருச்சி மாவட்டத்திலுள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திங்கள்கிழமை மட்டும் மொத்தம் 20 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

ஏப்ரல் 6 -ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்கான மனுதாக்கல் மாா்ச் 12-ஆம் தேதி தொடங்கியது. மாவட்டத்தில் மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூா், லால்குடி, மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா் என 9 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் கடந்த 3 நாள்களில் ஒரு சிலா் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனா்.

திங்கள்கிழமை முகூா்த்த நாள் என்பதால் அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினா் வேட்பு மனுத்தாக்கல் செய்தனா். அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழா் கட்சி என மொத்தமாக 20 போ் தங்களது வேட்பு மனுக்களை சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் திங்கள்கிழமை தாக்கல் செய்தனா். மாா்ச் 19-ஆம் தேதியுடன் மனுதாக்கல் நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.