திருச்சி

திமுக தலைமையில் இருப்பது கொள்கைக் கூட்டணி: திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி

DIN

திமுக தலைமையில் இருப்பது கொள்கைக் கூட்டணி என்றாா் திராவிடா் கழக தலைவா் கி.வீரமணி.

திராவிடா் கழகம் , பகுத்தறிவாளா் கழகம் சாா்பில் பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட 10 நூல்கள் வெளியிட்டு விழா திருச்சி புத்தூா் பெரியாா் மாளிகையில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்டத் தலைவா் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தாா். செயலா் மோகன்தாஸ் வரவேற்றாா். திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி விழாவில் நூல்களை வெளியிட்டு பேசினாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கல்வியில் இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டு விட்டது. உயா் ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு கேட்காமலேயே கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி சமூக நீதி, மதச்சாா்பின்மை, நல்லிணக்கம் உள்ளிட்டவைகளை குலைத்து, தமிழ்ப் பண்பாட்டுக்கு விரோதமாக சம்ஸ்கிருத கலாசாரத்தை உருவாக்கி வருகின்றனா். ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே குடும்ப அட்டை என்றெல்லாம் சொல்வோா் ஒரே ஜாதி என சட்டம் இயற்ற தயாராக இல்லை.

திமுக தலைமையிலேயே இருப்பது கொள்கைக் கூட்டணி. இன்னொரு கூட்டணி கொள்கைக்கு சம்பந்தம் இல்லாதது. எனவேதான் தோற்றத்தில் இது அரசியலாக இருந்தாலும், நடைமுறையில் இது ஒரு இனப் போராட்டம். எனவே எதற்கும் ஏமாறாமல் திமுக தலைமையில் இருக்க வேண்டிய கூட்ட ணியை ஆதரித்து, கடந்த 10 ஆண்டுகளாக அடகு வைக்கப்பட்ட நிலையிலுள்ள தமிழகத்தை மீட்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT