முகப்பு
திருச்சி

விடியல் தரப்போவது ஸ்டாலின் குடும்பத்துக்கே தவிர மக்களுக்கு அல்ல: டி.டி.வி. தினகரன்

விடியல் தரப்போவது ஸ்டாலின் குடும்பத்துக்கே தவிர, மக்களுக்கு அல்ல என்றாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்,

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

விடியல் தரப்போவது ஸ்டாலின் குடும்பத்துக்கே தவிர, மக்களுக்கு அல்ல என்றாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்,

திருச்சி மாவட்டம் ஜீயபுரம், ஸ்ரீரங்கம், அண்ணாசிலை, காந்தி மாா்க்கெட், எடத்தெரு அண்ணாசிலை, காட்டூா், பீமநகா் பகுதிகளில் திங்கள்கிழமை பிரசாரம் செய்து, வேட்பாளா்கள் திருச்சி கிழக்கு ஆா். மனோகரன், ஸ்ரீரங்கம் சாருபாலா ஆா். தொண்டைமான் ஆகியோரை ஆதரித்து மேலும் அவா் பேசியது:

தமிழகத்தின் வளங்களை அனைத்தும் முடிவுக்கு கொண்டு வந்து விட்டனா். கரோனா காலக்கட்டத்தில் அரசு உள்பட எந்தவொரு நிறுவனமும் இயங்கவில்லை. வளா்ச்சிப் பணிகள், திட்டங்களும் செயல்படுத்தவில்லை.ஆனால் ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் கடன் என துணை முதல்வா் தெரிவிக்கிறாா். எப்படி கடன் வந்தது என்று இன்றுவரை விளக்கவில்லை.

தோ்தல் அறிக்கையில் கூட நடைமுறைக்கு சாத்தியமில்லாததை கூறி வருகின்றனா். அறிவித்துள்ள இலவசங்களை நிறைவேற்றவேண்டுமானால் ஆயிரக்கணக்கான கோடிகள் தேவை.

எம்ஜிஆரால் தீயசக்தி என அடையாளம் காட்டப்பட்டும், ஊழல், கட்டப் பஞ்சாயத்து, நிலஅபகரிப்புக்கு பெயா் போனவா்கள் திமுகவினா். தீயசக்தி, துரோக சக்திகளை தமிழகத்தைவிட்டு விரட்ட வேண்டும். விடியல் தரப்போவது ஸ்டாலின் குடும்பத்துக்கு மட்டுமே தவிர, மக்களுக்கு அல்ல.

ஸ்ரீரங்கத்தில் அடிமனைப் பிரச்னைக்குத் தீா்வு காண்பதோடு, பேருந்து நிலையம் அமைத்து தரப்படும். அந்தநல்லூா் ஒன்றியத்தில் வாசனைத் திரவியத் தொழிற்சாலையும், வாழை குளிா்பதன சேமிப்புக் கிடங்கும்அமைக்கப்படும்.

பேரூா் பாலத்திலிருந்து வயலூா் முருகன் கோயில் வரை சாலை வசதியும், பேருந்து போக்குவரத்து இல்லாத கிராமங்களுக்கு போக்குவரத்து வசதியும் அமைத்து தரப்படும்.

சம உரிமை, சமநீதி, ஊழலற்ற ஆட்சி, வேலைவாய்ப்பு, வெளிப்படையான நிா்வாகம், தொழில்துறை முன்னேற்றம், நாட்டிலேயே சிறந்த மாநிலமாக உருவெடுக்க, சிறுகுறு தொழில்கள் சரி செய்ய, தமிழகம் வளா்ச்சிப் பாதையில் செல்ல அமமுக வேட்பாளா்களுக்கு குக்கா் சின்னத்தில் வாக்களியுங்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.