மணப்பாறை: மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பு சிறப்பு கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
திருச்சி மாவட்டம், மணப்பாறையில், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு இன்று பிற்பகல் சென்ற கரோனா தடுப்பு சிறப்பு கண்காணிப்பு அலுவலரும்,
திருச்சி மாவட்டம், மணப்பாறையில், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு இன்று பிற்பகல் சென்ற கரோனா தடுப்பு சிறப்பு கண்காணிப்பு அலுவலரும், அரசின் சிறப்பு செயலாளருமான ரீட்டா ஹரிஸ் தாக்கர் இ.ஆ.ப திடீர் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்.
அப்போது மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் மருத்துவர் முத்து. கார்த்திகேயன், கண்காணிப்பு அலுவலரை வார்டு வார்டாக அழைத்து சென்று கரோனா நோயாளிகளுக்கான படுகை வசதிகள், ஆக்சிஜன் உருளைகள் இருப்பு குறித்தும் தகவல் மற்றும் விளக்கமளித்தார்.
கண்காணிப்பு அலுவலர் கூறுகையில், நாள்தோறும் இப்பகுதியில் அதிகரித்து வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கையினை கருத்தில் கொண்டு மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்குள்ளான நோயாளிக்களுக்கான படுகை வசதிகள், அவர்களுக்கான ஆக்சிஜன் உருளைகள் கையிருப்புகள் ஆகியவை குறித்தும், மணப்பாறையில் கரோனா சிகிச்சை சிறப்பு முகாம் அமைப்பதற்கான முயற்சிகள் குறித்தும் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் அதற்கான அறிவிப்புகளை மாவட்ட ஆட்சியர் தெரிவிப்பார் என்றும் கூறினார்.
Advertisement
நிகழ்வில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன், வட்டாட்சியர் எம்.லஜபதிராஜ், நகராட்சி ஆணையர்(பொ) க.முத்து, வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சந்தோஷ் உள்ளிட்ட வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் ஆகியோர் உடனிருந்தனர்.