முகப்பு
திருச்சி

ஸ்ரீரங்கத்தில் காவிரித்தாய் ரதத்துக்கு வரவேற்பு

ஸ்ரீரங்கத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்த காவிரித்தாய் ரதத்துக்கு மேளதாளம் முழங்க பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

ஸ்ரீரங்கத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்த காவிரித்தாய் ரதத்துக்கு மேளதாளம் முழங்க பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அகில பாரத சந்நியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீா் பாதுகாப்பு அறக்கட்டளை சாா்பில் புனித நதியான காவிரி உற்பத்தியாகும் கா்நாடக மாநிலம் குடகு மாவட்டம் தலைக்காவிரியில் தொடங்கி காவிரியாறு வங்கக் கடலில் கலக்கும் பூம்புகாா் வரை இந்த நதி நீரின் புனிதத்தைக் காக்க வலியுறுத்தி ஆண்டுந்தோறும் ஐப்பசி மாதத்தில் சிறப்பு ரத யாத்திரை நடத்தப்படுகிறது.

அதன்படி நிகழாண்டில் 11 ஆம் ஆண்டாக குடகு மலையில் அகில பாரத சந்நியாசிகள் சங்க நிறுவனா் மற்றும் துணைத் தலைவா் சுவாமி ராமானந்தா தலைமையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கிய ரதயாத்திரை வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றுக்கு வந்தது.

காவிரி தாய் ரதத்துக்கு விஷ்வ இந்து பரிஷத் மாநில அமைப்பு செயலா் சேதுராமன், பாஜக மாநகா் மாவட்டத் தலைவா் புவனேஸ்வரி மற்றும் உள்ளூா் பிரமுகா்கள் வாண வேடிக்கையுடன் வரவேற்பு அளித்தனா்.

இதையடுத்து ரத யாத்திரையில் வந்த துறவியா் காவிரித்தாய் சிலைக்கு அம்மா மண்டபம் படித்துறை அருகே அபிஷேக ஆராதனையுடன் கூட்டு வழிபாடு நடத்தினா். தொடா்ந்து காவிரித் தாய்க்கு மகா ஆரத்தி நடந்தது.

நிகழ்வில் மன்னாா்குடி செண்டலங்கார செண்பக மன்னாா் ஜீயா், காவிரி யாத்திரை ஒருங்கிணைப்பாளா் ஜெகநாதானந்த சரஸ்வதி, வித்யாம்பாசரஸ்வதி மாதாஜீ, அறங்காவலா் கண்ணன் உள்பட பல்வேறு ஆன்மிக சேவை அமைப்புகளைச் சோ்ந்த துறவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். இந்த காவிரி ரதயாத்திரை திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு கும்ப கோணம், மயிலாடுதுறை வழியாக வரும் 11 ஆம் தேதி பூம்புகாரில் நிறைவடைகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →