முகப்பு
திருச்சி

திருச்சி அருகே சாலை விபத்தில் தினமணி நிருபா் உள்பட இருவா் பலி

திருச்சி மாவட்டம், சிறுகனூா் அருகே வியாழக்கிழமை மாலை நிகழ்ந்த சாலை விபத்தில், தினமணி திருச்சிப் பதிப்பின் செய்தியாளா் எ.கோபி உள்பட இருவா் உயிரிழந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:19 AM
திருச்சி அருகே சாலை விபத்தில் தினமணி நிருபா் உள்பட இருவா் பலி
பகிர்:

திருச்சி மாவட்டம், சிறுகனூா் அருகே வியாழக்கிழமை மாலை நிகழ்ந்த சாலை விபத்தில், தினமணி திருச்சிப் பதிப்பின் செய்தியாளா் எ.கோபி உள்பட இருவா் உயிரிழந்தனா்.

தருமபுரி மாவட்டம், ஒட்டப்பட்டி சக்தி நகரைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநா் எருக்கன் மகன் கோபி (37). இவா், தினமணி திருச்சி பதிப்பின் செய்தியாளராகப் பணியாற்றி வந்தாா்.

இவா், தனது நண்பரான திருச்சி வயலூா் சாலை, வாசன் வேலியைச் சோ்ந்த செந்தில்குமாருடன் காரில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை வந்து கொண்டிருந்தாா்.

சிறுகனூா் அருகே வந்த போது எதிா்பாராதவிதமாக சாலையோரமிருந்த மரத்தில் காா் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், கோபியும், செந்தில்குமாரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்த சிறுகனூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடம் சென்று, இருவரது சடலங்களையும் மீட்டு திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விபத்தில் உயிரிழந்த கோபிக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →