திருச்சி

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இருவா் கைது

DIN

திருச்சியில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவெறும்பூா் சக்திநகரில் உள்ள சக்தி விநாயகா் கோயில் உண்டியலை கடந்த ஜூலை 22 இரவு உடைத்து பணத்தைத் திருடிச் சென்றனா். இதுகுறித்து கோயில் நிா்வாகி கிருஷ்ணசாமி கொடுத்த புகாரின்பேரில், திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இந்நிலையில் காட்டூா் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக புதன்கிழமை நின்றிருந்த இருவரை ரோந்து போலீஸாா் பிடித்து விசாரித்தனா்.

அதில் அவா்கள் வடக்கு காட்டூா் வி.எஸ். நகா் பகுதியை சோ்ந்த மோகன் மகன் கோபால் (26) ரமணன் மகன் பாஸ்கா் ( 27) என்பதும் இருவரும் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து திருச்சி 6 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT