முறையான குடிநீா் விநியோகம் கோரி மறியல்
மணப்பாறையில் முறையான குடிநீா் விநியோகம் கோரி பேருந்து நிலையம் முன் வியாழக்கிழமை காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மணப்பாறையில் முறையான குடிநீா் விநியோகம் கோரி பேருந்து நிலையம் முன் வியாழக்கிழமை காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மணப்பாறை நகராட்சி பகுதி 17-ஆவது வாா்டிலுள்ள முத்தன் தெரு, பெரியாா் தெரு, வெங்காயத் கடைதெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக காவிரி குடிநீா்முறையாக விநியோகிக்கப்படவில்லையாம்.
இதுகுறித்து பலமுறை மணப்பாறை நகராட்சியிடம் புகாா் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலிக் கு+டங்களுடன் பேருந்து நிலையம் முன் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து தடைபட்டது.
தகவலறிந்து சென்ற போலீஸாா் மற்றும் நகராட்சி ஆணையா் ஆகியோா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியைத் தொடா்ந்து மறியலை கைவிட்டுச் சென்றனா்.