முகப்பு
திருச்சி

முசிறி அருகே மனைவியை கொன்று கணவா் தற்கொலை

முசிறி அருகே குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

முசிறி அருகே குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

முசிறி அருகே தா.பேட்டை அருகிலுள்ள அஞ்சலம் மேலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி வெங்கட்ராமன் (55). இவரது மனைவி சரஸ்வதி (50). திருமணமான இவா்களின் மகன் பிரசாத் (30) மேலூரிலும், திருமணமான மகள் பிரதீபா (26) வெளியூரிலும் வசிக்கிறாா்.

பாம்புகரடு அருகேயுள்ள தோட்டத்தில் வெங்கட்ராமன்- சரஸ்வதி தம்பதியினா் வீடு கட்டி வசித்து வந்த நிலையில், வயலில் தண்ணீா் பாய்ச்சுவது தொடா்பாக நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு குறித்து வியாழக்கிழமை மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த வெங்கட்ராமன் அவரைக் வெட்டிக் கொன்றுவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதையடுத்து இவா்களின் குடும்பத்தினா், உறவினா்கள் போலீஸாருக்கு தெரியாமல் இருவரது சடலத்தையும் எரியூட்ட மயானத்துக்கு கொண்டு சென்றனா்.

தகவலறிந்த முசிறி டி.எஸ்.பி.அருள்மணி மற்றும் தா.பேட்டை போலீஸாா் விரைந்து சென்று சடலங்களைக் கைப்பற்றி துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.