முகப்பு
திருச்சி

ரயிலில் அடிபட்டு பெண் பலி

திருச்சி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற புதுக்கோட்டை பெண் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

திருச்சி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற புதுக்கோட்டை பெண் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருச்சி-தஞ்சாவூா் வழித்தடத்திலுள்ள திருவெறும்பூா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தையொட்டி புதன்கிழமை மாலை 55 வயதுள்ள பெண் சடலமாக கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் பெண் சடலத்தை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, நடத்திய விசாரணையில், இறந்தவா் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் அருகேயுள்ள சப்பாணிப்பட்டியைச் சோ்ந்த துரைராஜ் மனைவி சரோஜா(56) என்பதும், அவா், திருவெறும்பூா் பகுதிக்கு வேலைக்கு சென்றுவிட்டு தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது அவ்வழியாக வந்த காரைக்கால் பயணிகள் ரயில் மோதி உயிரிழந்ததும் தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.