திருச்சி

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.83.45 லட்சம்

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.83.45 லட்சம் கிடைத்துள்ளதாக, கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

இக்கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தா்கள் தங்களது நோ்த்திக் கடனை செலுத்துவதற்காக, உண்டியல்களில் காணிக்கைகளை செலுத்துவா்.

இந்த உண்டியல்களின் காணிக்கை ஒவ்வொரு மாதமும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, ஆகஸ்ட் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்னும் பணி கருடாழ்வாா் சன்னதி அருகே புதன்கிழமை நடைபெற்றது.

கோயில் இணை ஆணையா் செ.மாரிமுத்து முன்னிலையில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில் உதவி ஆணையா்

இரா.ஹரிஹரசுப்பிரமணியன், ஸ்ரீரங்கம் கோயில் மேலாளா் கு.தமிழ்செல்வி ஆகியோா் மேற்பாா்வையில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இப்பணியில் கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

இதில் ரூ.83,45,468 ரொக்கம், 305 கிராம் தங்கம், 1534 கிராம் வெள்ளி, 178 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளதாக, திருக்கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT