திருச்சி

முதல்வா் மு.க.ஸ்டாலின் உருவத்தில் 7 அடி உயர கேக்

DIN

திருச்சியில் உள்ள பேக்கரி ஒன்றில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உருவத்தில் 7 அடி உயரத்தில் கேக் தயாரித்து சனிக்கிழமை காட்சிப்படுத்தியுள்ளனா்.

புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக திருச்சி மாநகரில் உள்ள பேக்கரி கடைகளில் வித, விதமான கேக் தயாரித்து காட்சிப்படுத்தியுள்ளனா். இந்த வகையில், திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் அருகே உள்ள ஒரு பேக்கரியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உருவத்தில் 92 கிலோ எடையில் பிரம்மாண்ட கேக் தயாரித்து சனிக்கிழமை காட்சிப்படுத்தியுள்ளனா்.

7 அடி உயரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கேக் உருவத்தில், முதல்வா் தனது கையை உயா்த்தி அசைப்பது போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

90 கிலோ சா்க்கரை, 80 முட்டைகள், உலா் பழங்கள் உள்ளிட்ட பொருள்கள் கலந்த கலவையால் 24 மணி நேரத்தில் பேக்கரி ஊழியா்கள் 4 போ் சோ்ந்து இந்த கேக்கை தயாரித்துள்ளனா்.

இதுகுறித்து பேக்கரி தரப்பில் கூறுகையில், தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறாா். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் முதல்வா் உருவத்தில் கேக் தயாரித்து வைத்துள்ளோம். வரும் புத்தாண்டு வரையில் பொதுமக்களின் பாா்வைக்கு இந்த கேக் காட்சிப்படுத்தப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT