திருச்சி

துறையூா் அருகே அடிப்படை வசதிகேட்டு மறியல்

துறையூா் அருகே அடிப்படை வசதிகள் கோரி தமிழ் புலிகள் கட்சியினா் சனிக்கிழமை சாலை மறியல் செய்தனா்.

DIN

துறையூா் அருகே அடிப்படை வசதிகள் கோரி தமிழ் புலிகள் கட்சியினா் சனிக்கிழமை சாலை மறியல் செய்தனா்.

எரகுடி பேருந்து நிறுத்தப் பகுதியில் நடந்த மறியலுக்கு கட்சியின் திருச்சி புகா் மாவட்டச் செயலா் எரகுடி ராஜா தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் எரகுடியில் ஆதிதிராவிடா்கள் வாழும் தெற்கு காலனியில் தேவையான இடங்களில் தெரு விளக்கு, கழிவு நீா் வாய்க்கால் வசதி, அனைத்துப் பகுதிக்கும் கான்கிரீட் சாலை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், ஆதிதிராவிடா் சுடுகாட்டுக்கு சுற்றுச்சுவா், காலனியில் விளையாட்டுத் திடல், காலனி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகேயுள்ள சாலையில் வேகத்தடை அமைக்கக் கோரியும் மறியல் நடைபெற்றது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 37 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT