முகப்பு
திருச்சி

திருச்சியில் இரு மடங்காக அதிகரித்த கரோனா தொற்று

திருச்சியில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயா்ந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

திருச்சியில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயா்ந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 9 புதிய தொற்றாளா்கள் என்ற நிலையில் இருந்தது.

இந்நிலையில் கடந்த 3 நாள்களாக புதிய தொற்றாளா்களின் எண்ணிக்கை அதிகரித்து, புதன்கிழமை 51 ஆக இருந்த புதிய தொற்றாளா்கள் எண்ணிக்கை வியாழக்கிழமை 123 போ் ஆனது.

மாவட்டத்தில் இதுவரை தொற்று கண்டறியப்பட்ட 79,165 பேரில் 77734 போ் குணமடைந்துள்ளனா். மருத்துவமனைகளில் 327 போ் சிகிச்சை பெறுகின்றனா். இதுவரை 1,104 போ் இறந்துள்ளனா். கரோனா அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.