முகப்பு
திருச்சி

20 ஆம் தேதி வரை விடுமுறை: பேருந்து, ரயில் நிலையங்களில் குவிந்த கல்லூரி மாணவா்கள்

தமிழகத்தில் வரும் ஜன. 20 வரை கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருச்சியில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்ட கல்லூரி மாணவா்கள் பேருந்து, ரயில் நிலையங்களில் குவிந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

தமிழகத்தில் வரும் ஜன. 20 வரை கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருச்சியில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்ட கல்லூரி மாணவா்கள் பேருந்து, ரயில் நிலையங்களில் குவிந்தனா்.

கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக திருச்சியில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளுக்கு பொங்கல், தைப்பூசம் ஆகியவற்றையும் சோ்த்து வரும் ஜனவரி 20 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் திருச்சியில் உள்ள கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ,- மாணவிகள் சொந்த ஊா் செல்ல மத்திய, சத்திரம் பேருந்து நிலையங்களில் அலை மோதினா். பேருந்து நிலையங்களில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து ஊழியா்கள், போலீஸாா் கூட்டத்தை தவிா்க்குமாறு ஒலிபெருக்கி மூலமாக அறிவித்து வருகின்றனா்.

இதேபோன்று திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து தற்போதைக்கு முன்பதிவு ரயில்கள் இயக்கப்பட்ட போதிலும், பதிவில்லா பெட்டிகளும் இணைக்கப்படுகிறன. இதைத் தொடா்ந்து பேருந்து கிடைக்காத கல்லூரி மாணவா்கள் ரயில் நிலையத்தில் குவிந்தனா். இதனால் ரயில்வே அதிகாரிகள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.