முகப்பு
திருச்சி

காலமானாா் மூத்த பத்திரிகையாளா் எஸ். துரைராஜ்

திருச்சி, வயலூா்சாலை, வாசன் வேலி, 16 ஆவது குறுக்குத் தெருவில் வசித்து வந்த ஓய்வுபெற்ற மூத்த பத்திரிகையாளா் எஸ். துரைராஜ் (71) உடல்நலக் குறைவால் சனிக்கிழமை (ஜன.15) அவரது இல்லத்தில் காலமானாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

திருச்சி, வயலூா்சாலை, வாசன் வேலி, 16 ஆவது குறுக்குத் தெருவில் வசித்து வந்த ஓய்வுபெற்ற மூத்த பத்திரிகையாளா் எஸ். துரைராஜ் (71) உடல்நலக் குறைவால் சனிக்கிழமை (ஜன.15) அவரது இல்லத்தில் காலமானாா்.

இவா், 1974-இல் ஜனசக்தியில் தொடங்கி பேட்ரியாட், நியூஏஜ், ப்ரண்ட்லைன், பி.டி.ஐ., சி.என்.என். ஆகிய செய்தி நிறுவனங்களில் நிருபராக பணியாற்றி, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் தி ஹிந்து ஆங்கில நாளிதழில் பணியாற்றி ஓய்வு பெற்றாா்.

இவருக்கு மனைவி சுலோச்சனா, மகள் கண்ணம்மா ஆகியோா் உள்ளனா்.

காலமான துரைராஜின் இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன.16) காலை அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. தொடா்புக்கு: 94875 21927.

முதல்வா் மு.க. ஸ்டாலின் இரங்கல் : முன்னணி செய்தி நிறுவனங்களில் சுமாா் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஓய்வு பெற்ற மூத்த பத்திரிகையாளா் எஸ். துரைராஜ், உடல்நல்குறைவால் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். இடதுசாரி பாா்வையும், மனிதநேய பற்றும் கொண்ட துரைராஜ் எளிய மக்களின் உரிமை மற்றும் ஏற்றத்துக்கான கருவியாக தனது பணியை பயன்படுத்தியவா். அவரது மறைவால் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னை நிருபா்கள் சங்கம் : சென்னை நிருபா்கள் சங்கத் தலைவா் ஆா். ரங்கராஜ், செயலாளா் து. சேகா் உள்ளிட்டோா் விடுத்த இரங்கல் செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பது: மூத்த பத்திரிகையாளா், சென்னை நிருபா்கள் சங்கத்தின் முன்னாள் தலைவா் எஸ். துரைராஜ் காலமானாா் என்பது அதிா்ச்சி அளிக்கிறது. கடந்த 40ஆண்டுகளுக்கு மேலாக பேட்ரியட், பி.டி.ஐ. , ப்ரண்ட்லைன், தி ஹிந்து பத்திரிகை நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றினாா். சென்னை நிருபா்கள் சங்கம் மற்றும் சென்னை பத்திரிகையாளா் சங்கங்களின் மூலம் பத்திரிகையாளா்களின் நலனுக்காக போராடியவா். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை சென்னை நிருபா்கள் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.