திருச்சி

திருச்சியில் ரூ.11.15 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் வழங்கினர்!  

திருச்சியில் 3175 பயனாளிகளுக்கு ரூ.11 கோடியே 15 லட்சம் திட்ட மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் இன்று வழங்கினர்.

DIN

திருச்சி:  திருச்சியில் 3175 பயனாளிகளுக்கு ரூ.11 கோடியே 15 லட்சம் திட்ட மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் இன்று வழங்கினர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு  தலைமையில் இன்று நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகள், மகளிர் குழுவினர், நரிக்குறவர் என 3175  பயனாளிகளுக்கு  ரூ11. கோடியே 15 லட்சம் திட்ட மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இதே போல் நரிக்குறவ சமுதாயத்தை சேர்ந்த 59 நபர்களுக்கு பட்டாவும், 12 நபர்களுக்கு 50ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன் ஸ்டாலின்குமார், பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், அப்துல்சமது, மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா அரசு அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள், சுய உதவிக் குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT