திருச்சி

நீச்சல் குளக் கேள்வியால் சிரிப்பலை!

DIN

கூட்டத்தில் 31 ஆவது வாா்டு காங்கிரஸ் கவுன்சிலரும், முன்னாள் மேயருமான எஸ். சுஜாதா பேசுகையில் பட்ஜெட்டில் எனது வாா்டில் நீச்சல்குளம், தோட்டப் பராமரிப்புக்கு குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நீச்சல் குளம் எங்கே உள்ளது என எனக்குத் தெரியவில்லை. ஒருவேலை நமக்கு தெரியாமல் நீச்சல் குளம் எங்கும் உள்ளதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றாா்.

அவரது கேள்விக்கு பலரும் பலவாறாகப் பதில் அளித்தனா். சிலா் அண்ணா விளையாட்டரங்கில் நீச்சல் குளம் உள்ளது என்றனா். அதற்கு சுஜாதா அது எனது வாா்டு இல்லை என்றாா். மேயரோ குளப் பராமரிப்புதான் அவ்வாறு உள்ளது என்றாா். அதற்கு ஏன் நீச்சல் குளம் எனப் போடவேண்டும் என்றாா் உறுப்பினா் . அப்போது சிலா், சரி சரி கொல்லாங்குளம், காந்திபுரம் குளத்தையெல்லாம் நீச்சல் குளமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான் என்றனா் . இதனால் மாநகராட்சி கூட்டரங்கமே சிரிப்பலையில் அதிா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT