திருச்சி

4 சவரன் சங்கிலிக்காக கொடூரமாக கொலை செய்யப்பட்ட மூதாட்டி: திருச்சியில் கொடூரம்

திருச்சி: திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையை அடுத்த தாயானூரில் நகைக்காக மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

DIN

திருச்சி: திருச்சி: திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையை அடுத்த தாயானூரில் நகைக்காக மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சோமரசம்பேட்டையை அடுத்த தாயனூர் கிராமத்தை சேர்ந்த அக்கமாள் (65) இன்று காலை  மாட்டிற்கு புல் அறுப்பதற்க்காக தோட்டத்திற்கு சென்று, பரித்து கொண்டு இருந்த போது மர்ம நபர்கள் அக்கம்மாளின்  கழுத்தில் துணியை போட்டு இறுக்கி கொன்று விட்டு, கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் சங்கிலியை திருடி சென்றுள்ளனர்.

இது குறித்த தகவல் அறிந்த சோமரசம்பேட்டை காவல் நிலைய காவலர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார், டிஎஸ்பி வாசுதேவன் உள்ளிட்டோர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக அருகில் கட்டிட வேலையில் ஈடுபட்டுவந்த கொத்தனார், சித்தால்கள் மற்றும் சில தொழிலாளர்களை சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அக்கம்மாளின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தங்க நகைக்காக மூதாட்டி கொடூரமாக கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த மன வருத்தத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூலூர் அருகே சிறுத்தை நடமாட்டம்! உடனடியாக பிடிக்க பொதுமக்கள் வேண்டுகோள்!

இலங்கையில் உருவானது டிட்வா புயல்!

“MGR போல விஜய்? வாய்ப்பில்லை! தம்பி இன்னும் நடிகர்தானே!” நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

மகிந்திரா பிஇ6 ஃபார்முலா சொகுசு கார் விலை வெறும் ரூ.18,000! அட உண்மைதாங்க

அதிக தொகைக்கு விற்பனையான கருப்பு ஓடிடி உரிமம்!

SCROLL FOR NEXT