திருச்சி

தொடரும் பாரம்பரியம்: மாட்டுவண்டிகளில் ஸ்ரீரங்கம் வந்த காவல்காரன்பட்டி கிராம மக்கள்

காவல்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த  சுமார் 1500 பக்தர்கள், 200 மாட்டு வண்டிகளில் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார்கள். 

DIN

திருச்சி: ஸ்ரீரங்கம்  ரெங்கநாதசுவாமியை தரிசனம் செய்ய திருச்சி மாவட்டம் அருகில் உள்ள காவல்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த சுமார் 1500 பக்தர்கள், சுமார் 200  இரட்டை மாட்டு வண்டியில் நேற்று இரவு கிளம்பி, இன்று காலை ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார்கள். 

இந்த கிராம மக்கள் மூதாதையர் காலந்தொட்டே 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாரம்பரிய மாட்டு வண்டியில் வந்து ஸ்ரீரங்கம் நம்பெருமாளை வழிபட்டுச் செல்வது வழக்கம். அந்த வகையில் இரண்டாவது அணியாக இன்று ஸ்ரீரங்கம் வந்தனர்.

பின்னர் நாளை வட திருக்காவிரி என்று அழைக்கப்படும் கொள்ளிடம் ஆற்றில் மொட்டையடித்து பெருமாளுக்கு நேர்த்தி கடன் செலுத்தி பின்பு பெருமாளை தரிசிக்க உள்ளனர்.

இன்றளவில் வசதி வாய்ப்புகள் அதிகரித்தபோதும், மாட்டி வண்டிகளில் வந்து நம்பெருமாளை தரிசனம் செய்யும் இந்நிகழ்வு ஆன்மீகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவமாக கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

இந்திய வீராங்கனைகள் ரேணுகா சிங், கிராந்தி கௌடுக்கு தலா ரூ. 1 கோடி பரிசு!

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் காலமானார்

SCROLL FOR NEXT