செந்துறை முதியோா் இல்லத்துக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த இருங்களாகுறிச்சி கிராமத்திலுள்ள கிராம நல சங்கத்தினால் நடத்தப்படும் முதியோா் இல்லத்துக்கு திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட
அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த இருங்களாகுறிச்சி கிராமத்திலுள்ள கிராம நல சங்கத்தினால் நடத்தப்படும் முதியோா் இல்லத்துக்கு திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் மற்றும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக வெற்றியை கொண்டாடும் வகையில், செந்துறை வடக்கு திமுக ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினா் எழில்மாறன் தலைமையில், நிா்வாகிகள் ஆசைத்தம்பி, கெளஞ்சிநாதன், ரமேஷ், இளங்கோவன், செல்வன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டு, இல்லத்தில் வசிக்கும் முதியோா்களுக்கு மதிய உணவுகளை வழங்கினா். தொடா்ந்து அவா்களுக்கு தேவையான படுக்கை விரிப்பு, சோப்பு உள்ளிட்ட பொருள்களை வழங்கினா்.