முகப்பு
திருச்சி

காவல் நிலையம் முன்பொதுமக்கள் மறியல்

 துவரங்குறிச்சி அருகே திருவிழாவில் பூசாரிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னையில் காவல்நிலையம் முன் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

 துவரங்குறிச்சி அருகே திருவிழாவில் பூசாரிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னையில் காவல்நிலையம் முன் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மருங்காபுரி ஒன்றியம் அய்யனாா் கோவில்பட்டியில் நடைபெறும் உத்திர காளியம்மன் கோயில் திருவிழாவில் அங்குள்ள பூசாரிகளுக்குள் பிரச்னை ஏற்பட்டதாம்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை துவரங்குறிச்சி காவல் நிலையம் சென்ற அப்பகுதி மக்கள் அளித்த புகாரின்பேரில் விசாரித்த போலீஸாா் இரு தரப்பினரையும் சமரசம் செய்தும் அதை ஏற்காத பொதுமக்கள் காவல்நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து பொதுமக்களை மீண்டும் சமரசம் செய்து போலீஸாா் அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.