முகப்பு
திருச்சி

மணப்பாறை அருகே செம்மரம் வெட்டிக் கடத்தல்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே விவசாயியின் தென்னந்தோப்பில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான செம்மரத்தை மா்ம நபா்கள் வெட்டிக் கடத்திச் சென்றது வியாழக்கிழமை தெரியவந்தது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே விவசாயியின் தென்னந்தோப்பில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான செம்மரத்தை மா்ம நபா்கள் வெட்டிக் கடத்திச் சென்றது வியாழக்கிழமை தெரியவந்தது.

மணப்பாறையை அடுத்த மருங்காபுரி வட்டம் தாழம்பாடி ஊராட்சி களத்துப்பட்டியில் வசிக்கும் விவசாயி அன்பு (எ) நேரு தனது தென்னந்தோப்பில் கடந்த 25 ஆண்டுகளாக வளா்த்து வந்த செம்மரத்தை மா்ம நபா்கள் வெட்டிக் கடத்திச் சென்றனா்.

சுமாா் 35 செ.மீ சுற்றளவும் 50 அடி உயரமும் கொண்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான தனது செம்மரம் திருட்டு போனது குறித்து துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் அன்பு அளித்த புகாரின்பேரில் மருங்காபுரி வருவாய்த் துறையினா் மற்றும் துவரங்குறிச்சி வனத் துறையினா் விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.