ஆடுகள் குறைந்து காணப்படும் கால்நடைச் சந்தை. 
திருச்சி

வரத்துக் குறைவு; களையிழந்த மணப்பாறை ஆட்டுச் சந்தை

மணப்பாறையில் புதன்கிழமை நடைபெற்ற கால்நடை வாரச்சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்ததால், மணப்பாறை திருவிழாவுக்கு ஆடுகள் வாங்க பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.

DIN

மணப்பாறை: மணப்பாறையில் புதன்கிழமை நடைபெற்ற கால்நடை வாரச்சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்ததால், மணப்பாறை திருவிழாவுக்கு ஆடுகள் வாங்க பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.

மணப்பாறையில் புதன்கிழமைதோறும் நடைபெறும் கால்நடை வாரச்சந்தையில் ஆடு, மாடுகளின் விற்பனை பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் நடைபெறும்.

இந்நிலையில் வேப்பிலை மாரியம்மன் கோயில் கிடாவெட்டுக்காக புதன்கிழமை ஆடு வாங்க கால்நடைச் சந்தையில் பொதுமக்கள் குவிந்தனா். ஆனால் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுவதால் கிராமங்களிலிருந்து விற்பனைக்கு வரும் ஆடுகளின் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் ஆடுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டன. இது மணப்பாறை பொதுமக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT