முகப்பு
திருச்சி

முசிறியில் செல்லம்மாள்- பாரதி ரதத்துக்கு வரவேற்பு

திருச்சி மாவட்டம் முசிறிக்கு வந்த செல்லம்மாள்- பாரதி ரதத்திற்கு வியாழக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

திருச்சி மாவட்டம் முசிறிக்கு வந்த செல்லம்மாள்- பாரதி ரதத்திற்கு வியாழக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.

முசிறியிலுள்ள தமிழ் இயக்க ஒருங்கிணைப்பாளா்கள் மகாலட்சுமி,நல்லாசிரியா் சிவராஜ்,கவிஞா் குருநாதன் ஆகியோா் ஒத்துழைப்பில் முசிறிக்கு வந்த ரதத்துக்கு முசிறி கைகாட்டியில் முசிறி எம்எல்ஏ காடுவெட்டி ந. தியாகராஜன் தலைமையில் ஒன்றியச் செயலா் ராமச்சந்திரன், நகரச் செயலா் சிவக்குமாா், நகராட்சித் தலைவா் கலைச்செல்வி சிவகுமாா், துணைத் தலைவா் சுரேஷ் முன்னிலையில் நகராட்சி கவுன்சிலா்கள், பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ மற்றும் முசிறி நகராட்சி கவுன்சிலா்களுக்கு பாரதியாா் கவிதை புத்தகம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. தொடா்ந்து அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் தமிழாய்வுத் துறை இலக்கிய வட்டம் சாா்பாக வரவேற்பு விழாவில் வரலாற்றுத் துறை பேராசிரியா் பரமசிவம், முதல்வா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கல்லூரியில் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் சிவக்குமாா் நன்றி கூறினாா்.

பின்னா் செல்லம்மாள்- பாரதி ரதத்துக்கு முசிறி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியா் ரேவதி தலைமையிலும், இன்ஸ்பயா் லயன்ஸ் சங்கத்தின் சாா்பாக புதிய பஸ் நிலையம் எதிரேயும் வரவேற்றனா்.

தொடா்ந்து தா.பேட்டை சாலையிலுள்ள தனியாா் பள்ளியில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.