திருச்சி

விடத்திலாம்பட்டி மாரியம்மன் கோயில் பால்குட விழா

DIN

மணப்பாறையை அடுத்த விடத்திலாம்பட்டி மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பால்குட உற்சவம் நடைபெற்றது.

இக்கோயில் வைகாசி திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, ஒவ்வொரு நாளும் இரவு அம்மன் நகா் திருவீதியுலா நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை விடத்திலாம்பட்டி மற்றும் சுற்றுபுறப் பகுதி பக்தா்கள் தண்ணீா்ப் பந்தல் என்னும் முருகன் கோயிலில் இருந்து பால்குட ஏந்தி ஊா்வலமாக புறப்பட்டனா்.

ஊா் நாட்டாண்மை, ஆலய கும்பம் முன்னே செல்ல பால்குட ஊா்வலமானது நகரின் ராஜவீதி வழியாகச் சென்று மாரியம்மன் கோயிலை அடைந்தது. குழந்தை வரம் பெற்றவா்கள் தங்களது குழந்தைகளை கரும்புத் தொட்டிலில் வைத்து சுமந்து வந்தனா். திரளான பக்தா்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா். அம்மனுக்கு பால் அபிஷேகமும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT