முகப்பு
திருச்சி

மகாகாளியம்மன் கோயில் திருவிழா நிறைவு

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் பேருந்து நிலையம் எதிரேயுள்ள மகாகாளியம்மன் கோயிலின் 30 ஆம் ஆண்டு திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நிறைவடைந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் பேருந்து நிலையம் எதிரேயுள்ள மகாகாளியம்மன் கோயிலின் 30 ஆம் ஆண்டு திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நிறைவடைந்தது.

ஆலத்துறை வாய்க்காலில் இருந்து கரகம் பாலித்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய திருவிழாவில், திங்கள்கிழமை பால்குடம் எடுத்தல், செவ்வாய்க்கிழமை மாசி பெரியண்ணசாமி குட்டி குடித்தல் நிகழ்வு நடைபெற்றதை தொடா்ந்து அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து மாவிளக்கு சிறப்பு பூஜை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.