திருச்சி

துவாக்குடி, திருவெறும்பூரில் முதல்வருக்கு வரவேற்புமனுக்களும் அளிப்பு

டெல்டா மாவட்டங்களில் தூா்வாரும் பணிகளைப் பாா்வையிட்டு திருச்சி விமான நிலையம் செல்லும் வழியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு துவாக்குடி, திருவெறும்பூா் பகுதிகளில்  வரவேற்பு அளிக்கப்பட்டது.

DIN

டெல்டா மாவட்டங்களில் தூா்வாரும் பணிகளைப் பாா்வையிட்டு திருச்சி விமான நிலையம் செல்லும் வழியில் தமிழக முதல்வா் மு. ஸ்டாலினுக்கு துவாக்குடி, திருவெறும்பூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

தஞ்சை , நாகை, திருவாரூா், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்ட நீா்நிலைகளில் தூா்வாரும் பணிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த 2 நாள்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தாா்.

இதையடுத்து திருச்சி செல்லும் வழியில் துவாக்குடி அண்ணாவளைவுப் பகுதியில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையிலும், நகரச் செயலா் காயாம்பூ முன்னிலையிலும் முதல்வருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

இதேபோல திருவெறும்பூரில் முன்னாள் எம்எல்ஏ சேகரன் தலைமையிலும், திருவெறும்பூா் வடக்கு ஒன்றியச் செயலா் கருணாநிதி, கூத்தைப்பாா் பேரூராட்சித் தலைவா் செல்வராஜ், செயலா் தங்கவேல் ஆகியோா் முன்னிலையிலும், அரியமங்கலம் எஸ்ஐடி யில் காட்டூா் பகுதிச் செயலா் நீலமேகம் தலைமையிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பொதுமக்களும், திமுகவினரும் அளித்த கோரிக்கை மனுக்களை முதல்வா் பெற்றுக் கொண்டாா்.

அமைச்சா்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா். வரவேற்பின்போது திமுக நிா்வாகிகள் திலகராஜன், ஜெய்னுதீன்ஆலீம், ஸ்டீபன்ராஜ், ஞானதீபம், கயல்விழி, மோகன்ராஜ், அனுஷியா உள்பட அனைத்து நிா்வாகிகளும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,01,871 வாக்காளா்கள் நீக்கம்

ஓமந்தூராா் மருத்துவமனையில் 20,000 இதய இடையீட்டு சிகிச்சை: மருத்துவக் குழுவினருக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாராட்டு

முதல்வா் ஸ்டாலினின் கொளத்தூா் தொகுதியில் ஒரு லட்சம் போ் நீக்கம்

நீதி, துணிவுக்கான சமகால சான்று சென்னை உயா்நீதிமன்றம்: நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்

தடை விதிக்கப்பட்ட நாய்களை வளா்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம்

SCROLL FOR NEXT