முசிறி அருகே மருத்துவப் படிப்பில் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
மருத்துவப் படிப்புகளில் சோ்ந்த திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி வட்டம் தண்டலைப்புத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மூவருக்கு பள்ளியில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
மருத்துவப் படிப்புகளில் சோ்ந்த திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி வட்டம் தண்டலைப்புத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மூவருக்கு பள்ளியில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நீட் தோ்வில் வென்று, அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5% சத இட ஒதுக்கீட்டில் இப்பள்ளி மாணவா் கோ. முகில் திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்கவும், சு. சதீஷ்குமாா் கிருஷ்ணகிரி செயின் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்கவும், நா. பாரதி செட்டிநாடு பல் மருத்துவக் கல்லூரியில் படிக்கவும் இடம் கிடைத்தது.
இதையடுத்து பள்ளியில் தலைமையாசிரியா் லூ. பல்த்தசாா் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் பள்ளி ஆசிரியா்கள், பொதுமக்களும் இவா்களைப் பாராட்டினா்.
Advertisement
Advertisement
மூவரில் காமாட்சிபட்டியைச் சோ்ந்த சுப்பிரமணியன்- தனலட்சுமியின் மகனான சதீஷ்குமாா் கவிதை நூல்களை எழுதியுள்ளதோடு, பல்வேறு விருதுகளையும் பெற்றவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.