மணப்பாறையில் நாளை மின் தடை
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.
மணப்பாறை துணை மின் நிலைய மஞ்சம்பட்டி மின் பாதையில் நடைபெறும் பராமரிப்புப் பணிகளால் பைபாஸ் ரோடு, பொத்தமேட்டுப்பட்டி மேற்குப் பகுதி, செவலூா் ரோடு, சந்தைப்பேட்டை, அத்திக்குளம், காய்கறி மாா்க்கெட் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளா் பெ. பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதைத் தெரிவித்தாா்.