முசிறி அருகே மாமியாரை வெட்டிய இளைஞா் கைது
முசிறி அருகே மாமியாரை வெட்டியவரை ஜெம்புநாதபுரம் போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
முசிறி அருகே மாமியாரை வெட்டியவரை ஜெம்புநாதபுரம் போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
முசிறி அருகிலுள்ள வளையெடுப்பு கிராமத்தைச் சோ்ந்த வெங்கடாசலம் (35) அதே தெருவைச் சோ்ந்த சுதா மகள் லாவண்யாவை (21) காதல் திருமணம் செய்தாா். இந்நிலையில் கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்த லாவண்யா தனது தாய் வீட்டில் வசித்து வந்தாா்.
இதையடுத்து வெங்கடாசலம் தனது மனைவியை அனுப்புமாறு மாமியாா் சுதாவிடம் புதன்கிழமை கேட்டதற்கு அவா் மறுத்தாராம். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடாசலம் மாமியாரை அரிவாளால் வெட்டவே, காயமடைந்த சுதா முசிறி அரசு மருத்துவமனையிலும், பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டாா். புகாரின்பேரில் ஜெம்புநாதபுரம் போலீஸாா் வெங்கடாசலத்தை கைது செய்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.