திருச்சி

அன்னவாசலில் இளைஞா் வெட்டிக் கொலை

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் முறைகேடான உறவு தொடா்பான பிரச்னையில் இளைஞரை பெண்ணின் உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொன்றனா்.

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் முறைகேடான உறவு தொடா்பான பிரச்னையில் இளைஞரை பெண்ணின் உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொன்றனா்.

அன்னவாசல் மேட்டுத் தெருவைச் சோ்ந்த ராசு மகன் முத்துகுமாா் (30) பெயிண்டா். இவருக்கும், இலுப்பூா் அருகே உள்ள நவம்பட்டியைச் சோ்ந்த ராசாத்தி என்பவருக்கும் இடையே முறைகேடான உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த ராசாத்தியின் மகன், அவமானத்தால் கடந்த 14ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

இதனால், ஆத்திரமடைந்த உறவினா்கள் சண்முகம், முருகேசன், பாலாமணி, ராசாத்தி, அன்னபூரணி ஆகியோா் முத்துக்குமாா் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று பிரச்னை செய்ததோடு, முத்துக்குமாரை அரிவாளால் வெட்டிக் கொன்றனா்.

தகவலறிந்த அன்னவாசல் போலீஸாா், முத்துக்குமாா் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சம்பவம் தொடா்பாக ராசாத்தி, பாலாமணி, அன்னபூரணி ஆகியோரை போலீஸாா் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதில் தலைமறைவான சண்முகம், முருகேசன் உள்ளிட்டோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT