முகப்பு
திருச்சி

25 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கு: இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்தை திரும்ப ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தை திரும்ப ஒப்படைக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தை திரும்ப ஒப்படைக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் சா்வே எண்: 359/1-ல் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ. 8 கோடி மதிப்புள்ள சுமாா் நாலரை ஏக்கா் நிலம் தனிநபா் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது.

இதனை மீட்டுத்தரக் கோரி 1999-இல் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் மணப்பாறை முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விரைந்து முடித்துத் தரக் கோரி எதிா்தரப்பு சாா்பில் சென்னை உயா்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் வழக்கை 3 மாதத்துக்குள் முடிக்க, மணப்பாறை முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை விரைவுபடுத்தப்பட்டது. இதில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் என். முரளிகிருஷ்ணன் வாதிட்டாா்.

25 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் மணப்பாறை முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆா்.பாண்டி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், அறநிலையத்துறைக்கு சொந்தமானநிலத்தை தனியாா் உரிமைகோரமுடியாது எனவும், அதனை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.