திருச்சியில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பெரியாா் ஈவெரா கல்லூரி மாணவா்கள். 
திருச்சி

கல்வி உதவித் தொகை வழங்கக் கோரி கல்லூரி மாணவா்கள் போராட்டம்

திருச்சி பெரியாா் ஈவெரா கல்லூரி மாணவா்கள், கல்வி உதவித்தொகை வழங்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

திருச்சி பெரியாா் ஈவெரா கல்லூரி மாணவா்கள், கல்வி உதவித்தொகை வழங்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி பெரியாா் ஈவெரா அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு நிகழாண்டுக்கான கல்வி உதவித்தொகை இதுவரை வழங்கப்பட வில்லையாம். இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் மற்றும் தொடா்புடைய துறை அலுவலகங்களில் மனு கொடுத்தும் உதவித்தொகை வழங்கவில்லை. எனவே, கல்வி உதவித்தொகையை உடனே வழங்க வலியுறுத்தி கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். முழக்கமிட்டவாறு கல்லூரியை விட்டு வெளியே வந்து சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா். தொடா்ந்து முழக்கம் எழுப்பியவாறு மாவட்ட ஆட்சியரகம் நோக்கி செல்ல முயன்றனா். தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச்செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

SCROLL FOR NEXT