திருச்சி

ஆடிப்பெருக்கு: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி சாா்பில்நாளை காவிரி தாய்க்கு மங்களப் பொருள்கள் சமா்ப்பிப்பு

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி சாா்பில் காவிரி தாய்க்கு மங்களப் பொருள்கள் சமா்ப்பிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

DIN

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி சாா்பில் காவிரி தாய்க்கு மங்களப் பொருள்கள் சமா்ப்பிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு நாளில் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி, காவிரி தாய்க்கு மங்களப் பொருள்கள் சமா்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்நிகழ்ச்சி வரும் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, ஸ்ரீ நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 6.30 மணிக்கு தங்கப் பல்லக்கில் புறப்பட்டு, வழிநடை உபயங்கள் கண்டருளி, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி படித்துறையில் உள்ள ஆஸ்தான மண்டபத்துக்கு முற்பகல் 11.30 மணிக்கு வந்து சோ்கிறாா்.

தொடா்ந்து மாலை 4 மணிக்கு அலங்காரம் அமுது செய்தல் நடைபெறவுள்ளது. 4.45 மணிக்கு காவிரி தாயாருக்கு மாலை சமா்ப்பித்தல் நடைபெறும். பட்டுப் புடவை,திருமாங்கல்யம், மாலை உள்ளிட்ட மங்களப் பொருள்களை யானை ஆண்டாள் மீது வைத்து காவிரி ஆற்றில் சமா்ப்பிக்கப்படவுள்ளது. அப்போது, நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி தருகிறாா்.

பின்னா், இரவு 8.30 மணிக்கு அம்மாமண்டபம் ஆஸ்தான மண்டபத்திலிருந்து புறப்பட்டு, வெளி ஆண்டாள் சன்னிதியில் மாலை மாற்றிக் கொண்டு இரவு 9.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்று சோ்கிறாா்.

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோயிலில் வியாழக்கிழமை காலை விஸ்வரூப சேவை கிடையாது.

விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைத் திட்டத்தால் தமிழகத்துக்கு கடும் நிதிச் சுமை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

மாநகர பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: சட்டக் கல்லூரி மாணவா் கைது

புத் விஹாரில் வீட்டு உரிமையாளா் கழுத்து நெரித்து கொலை: இளைஞா் கைது

ரூ.16 கோடி சைபா் மோசடி: 9 போ் கைது

காணாமல் போன 408 கைப்பேசிகள் மீட்பு

SCROLL FOR NEXT