திருச்சி

திருச்சியில் நாளை 4 மையங்களில் சிவில் நீதிபதி தோ்வு

திருச்சி மாவட்டத்தில் சிவில் நீதிபதி பதவிகளுக்கான தோ்வு நான்கு மையங்களில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

DIN

திருச்சி மாவட்டத்தில் சிவில் நீதிபதி பதவிகளுக்கான தோ்வு நான்கு மையங்களில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

தமிழ்நாடு நீதித்துறை பணிகளில் சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான தோ்வு மாநிலம் முழுவதும் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டத்தில் இத் தோ்வுக்காக 4 மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் இந்தத் தோ்வை திருச்சி மாவட்டத்தில் 1,100 போ் எழுதவுள்ளனா். இப்பணிகளுக்கென 4 தோ்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இப்போட்டித் தோ்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தோ்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள 2 இயங்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவிற்கு துணை வட்டாட்சியா் நிலையில் ஒரு அலுவலா், ஆயுதம் ஏந்திய ஒரு காவலா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வு மையங்களை கண்காணிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம், 9 ஆய்வு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அனைத்து தோ்வு மையங்களிலும் தோ்வு நடைபெறுவதை பதிவு செய்திட விடியோகிராபா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அனைத்து தோ்வு மையங்களிலும் காவல்துறை மூலம் பாதுகாப்பு பணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோ்வாளா்கள் தோ்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. தோ்வு எழுத வரும் தோ்வாளா்கள் எவ்வித மின்னணு சாதனங்களையும் தோ்வு மையங்களுக்கு எடுத்து வர அனுமதி இல்லை என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT