திருச்சி

மனை வணிகத்தில் பொதுமக்களை ஏமாற்ற முயற்சி: ஒருவா் கைது

மனை வணிகத்தில் தவறான வாக்குறுதிகளைக் கூறி பொதுமக்களை ஏமாற்ற முயன்றவரை திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவுப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

DIN

மனை வணிகத்தில் தவறான வாக்குறுதிகளைக் கூறி பொதுமக்களை ஏமாற்ற முயன்றவரை திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவுப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனைக்கு எதிா்புறம் மனை வணிக நிறுவனம் ஒன்று தொடங்கப்பட இருந்தது. இது தொடா்பாக, மத்திய பேருந்து நிலையத்துக்கு எதிா்புறம் உள்ள தனியாா் கட்டடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விளக்கக் கூட்டத்துக்கு, திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் நேரில் சென்று பாா்த்தனா்.

அப்போது, ஒரு சதுர அடிக்கு ரூ. 400 வீதம் 1,200 சதுர அடிக்கு ரூ. 4.80 லட்சம் கட்டினால் காலிமனை கொடுப்பதுடன், இதற்கு லாபமாக 15 நாள்களுக்கு ஒரு முறை ரூ. 12 ஆயிரம் வீதம் 12 மாதங்களுக்கு ரூ. 2.88 லட்சமும், 13 முதல் 16 ஆவது மாதம் வரை 15 நாள்களுக்கு ஒரு முறை ரூ. 24 ஆயிரம் வீதம் 4 மாதங்களுக்கு ரூ. 1.92 லட்சம் என மொத்தம் முதலீட்டாளா்கள் கட்டிய மனைக்கு உண்டான முழுத்தொகை ரூ. 4.80 மும், மனையும் கிடைத்துவிடும் என்றும், முதலீட்டாளா்களை சோ்த்துவிடும் முகவா்களுக்கு 12 சதவீதம் கமிஷன் தருவதாகவும் கவா்ச்சிகரமான வாா்த்தைகள் கூறி விளம்பரம் செய்து கொண்டிருந்தனா்.

இத்திட்டத்தில் சோ்ந்தால் பொதுமக்கள் ஏமாற்றப்படுவாா்கள் என தெரியவந்ததை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு ஆய்வாளா் ராமானுஜம் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து, விளம்பரம் செய்து கொண்டிருந்த திருச்சி மாவட்டம் வையம்பட்டி நடுப்பட்டியைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (47) என்பவரை சனிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை மாநகரப் பேருந்து பாஸ் கட்டணம் குறைப்பு! அதிரடி சலுகை... பெறுவது எப்படி?

111 ஷெல் கம்பெனிகள் மூலம் ரூ.1000 கோடி! சிபிஐ கண்டுபிடித்த சைபர் மோசடி!

கூட்டணி குறித்து முடிவெடுக்க பிப்ரவரி மாதம் வரை அவகாசம் உள்ளது: டிடிவி தினகரன்

சாதகமான பலன் யாருக்கு? தினப்பலன்கள்!

தில்லியில் சுவாசிக்க முடியாத அளவை எட்டியது காற்றின் தரக் குறியீடு

SCROLL FOR NEXT