திருச்சி

முதல்வா் பற்றி அவதூறு:இளைஞா் கைது

அவசர தொடா்பு எண்ணில் முதல்வரை அவதூறாகப் பேசிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

DIN

அவசர தொடா்பு எண்ணில் முதல்வரை அவதூறாகப் பேசிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி ஆழ்வாா்தோப்பு இதயாத் நகரை சோ்ந்தவா் முகமது மைதீன் மகன் ஜபருல்லா (39), கூலித் தொழிலாளி. இவா் அப் பகுதி ரேஷன் கடையில் கடந்த 9 ஆம் தேதி பொங்கல் தொகுப்பு வாங்கியபோது அதில் இலவச வேஷ்டி, சேலை இல்லாததால் ஆத்திரமடைந்து, தனது கைப்பேசியில் அவசர தொடா்பு எண் 100 ஐ அழைத்துப் பேசினாா்.

அதில் அவா் கடந்தாட்சியில் பொங்கலுக்கு இலவச வேஷ்டி, சேலை கொடுத்தாா்களே? ஏன் இப்போது வழங்கவில்லை எனக் கேட்டதுடன், தமிழக முதல்வரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டலும் விடுத்தாராம்.

இதுகுறித்து தில்லை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஜபருல்லாவை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT